Wednesday, 2 January 2013

தபூகில் கொள்ளுமேட்டு பெண்ணின் ஜனாஜா நல்லடக்கம்...









TABUK-NAPCO கம்பணியில் பணியாற்றும் கொள்ளுமேடு M.I. இக்பால் மனைவியும் , ரில்வான் தாயாருமான செல்லகனி என்கின்ற சலிமா  {வயது 42} அவர்கள் 28/12/2012 வெள்ளியன்று வபாத் ஆனார்கள் என்ற செய்தி சகோ, இக்பால் அவர்கள் முலம் TNTJ கிளை நிர்வாகிகளுக்கு கிடைத்தது. தகவல் அறிந்த கிளை நிர்வாகிகள்  உடனடியாக மரணித்த சலீமாபாணு அவர்களின் உடலை தபூக்கில் அடக்கம் செய்வதற்கான அனைத்துவிதமான பணிகளையும் துரிதமாக முடித்து கடந்த 01/01/2013 செவ்வாய்யன்று தபூக் பொது மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்!...
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக! 

Indian Embassy, மற்றும் Ministry of Interior ஆகிய அலுவலகங்களில் ஆகவேண்டிய அனைத்து பணிகளையும் ஜித்தா மண்டல TNTJ விரைந்து முடித்ததால் இரண்டு தினங்களில் நல்லடக்கம் நடைபெற்றது, 

வல்ல இறைவனிடம் 
இவருக்காக துஆச் செய்யுங்கள்!!

“நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள்!! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!!! 
அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்” 
[உலகப்பொதுமறை-திருக்குர்ஆன் - 5 : 2]
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜுவூன்!...

No comments:

Post a Comment