Tuesday, 1 January 2013

அற்பமானவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளா?






நமதூர் ரஹ்மத் நகரில் ஒருவீட்டில் கத்தரிக்காயில் அல்லாஹ்  என்று எழுதியுள்ளதாக கூறுகின்றனர், அல்லாஹ்வின் படைப்புகளில் இது போன்ற வித்தியாசமான தோற்றம் கொண்டவை ஏராளம் உள்ளன. ராம், ஓம், சிலுவை, சூலாயுதம் இன்னும் பல்வேறு மதங்களுடன் சமந்தப்பட்ட  வடிவங்களுடன் மரங்களும், மலைப்பறைகளும், கால்நடைகளின் தோள்களிலும் காணப்படுகின்றன. ஓவ்வொருவரும் இது போன்றதை எடுத்துக் காட்டி தங்கள் மதத்தை மெய்ப்பிக்க வந்த அத்தாட்சி என்று கூறுகின்றனர்.

தற்செயலாக அமைந்த இது போன்றவற்றை எல்லாம் அத்தாட்சி என வாதிட்டால் எல்லா மதத்தவர்களிடமும் இது போன்ற அத்தாட்சிகள் அதிகமதிகம் உள்ளன. சிலுவை போலவும், மேரி போலவும் வடிவத்தில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. இவர்கள் வாதப்படி இவையும் அத்தாட்சிகள் என்று ஏற்றுக்கொள்ளமுடியுமா?

மாற்றுமதத்தினர் தங்கள் வேதநூல்களில் இருந்தது எதையாவது எடுத்துக்காட்டி தங்கள் மதத்தை நிரூபிக்க முடியாது என்பதால் இதுபோன்ற அற்பமான ஆதாரங்களை தூக்கிப்பிடிக்கின்றனர், சரக்கு இல்லாத வியாபாரிதான் களிடப்பவை வைத்து வியாபாரம் பண்ணவேண்டும், சத்தியமார்க்கத்தில் இருக்கும் நமக்கு அது அவசியமில்லை.

அல்லாஹ் என்ற அரபு எழுத்து எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் காட்டினால் இல்லை சூலம் தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று  ஹிந்துக்கள் கூறுவார்கள்.
மூஸா நபி இலேசாக பாறையில் தட்டியவுடன் தண்ணீர் பீறிட்டு அடித்தது. இது போல் எவரும் செய்ய முடியாது என்பதால் இதை அத்தாட்சி எனலாம்.

கத்தரிக்காய் ஓரிருநாளில் அழுகிவிட்டால் அதிலுள்ள வடிவம் மறைந்துவிடும், இறைவனின் அத்தாட்சிகள் இவ்வளவு பலவீனமாக வலிமையற்றதாக ஒருக்காலும் இருக்க முடியாது.
அத்தாட்சிகள் என்பன, ஒரே இறைவன் இருக்கிறான் என்பதைத் தெளிவாக அறிவிக்கும். நீங்கள் கூறுபவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் பல கடவுள் உள்ளனர் என்பதற்கும் இது போன்ற அத்தாட்சிகளை (?) மற்றமதத்தவர்களும்  காட்டுவார்கள்.
அல்லாஹ்வைப் பற்றியும் அவனது அத்தாட்சிகள் பற்றியும் அறிவு இல்லாதவர்கள் தான் மாயைகளை அத்தாட்சி என்பர்.

வானங்கள், பூமி, சூரியன், கோள்கள், மழை மேகங்கள், விண்மீன்கள், காற்று, பயிர்கள் முளைப்பது, கருவில் மனிதன் வளர்வது, மனிதனுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள வியக்க வைக்கும் அற்புதங்கள் என கோடானு கோடி அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிக் கொண்டே தான் இருக்கிறான்.
இத்தகைய பிரம்மாண்டமான மலைக்கச் செய்யும் அத்தாட்சிகளை விட்டு விட்டு அற்பமானவைகளை அத்தாட்சி என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
கோடி கோடியாக செல்வம் வைத்திருப்பவன் செல்லாத காலணாவைப் பெரிதாக நினைப்பது போலவே இவர்களின் நிலைமை அமைந்துள்ளது.
இத்தகைய அற்பமான தற்செயலானவற்றை அத்தாட்சி என்று கூற ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் தோற்று விடுவீர்கள்! இது போன்ற செல்லாக்காசுகள் உங்களை விட மற்றவர்களிடம் மூட்டை மூட்டையாகக் குவிந்துள்ளன.மாற்றுமதார்களிடமும் எடுத்து சொல்லவேண்டிய அதிசயங்கள் ஆயிரமாயிரம் குரானில் குவிந்துகிடக்கின்ற நிலையில் அற்பமானவற்றை இப்படி பரப்புவதால் எந்தபயனும் இல்லை.

No comments:

Post a Comment