(புகைப்படம்:-lalpet.net)
மறுமையில் மனிதன் வெற்றிபெற குரான், ஹதீஸை மட்டுமே பின்பற்றவேண்டும் மதுஹபுகள் அனைதும் வழிகேடாகும் என்று ஏகத்துவ கொள்கையை நாம் சொல்ல முயன்றால் நஜாத்காரன், குழப்பவாதி, ஊரை ரெண்டாக்க பார்கிறார்கள், ஒற்றுமையை குலைக்கப்பார்கிறார்கள், என்று ஒற்றுமைகோஷம் போடுபவர்கள் சற்று சிந்தித்து பார்க்கும் தருணம் இது,
ஒரு கொள்கையை முன்வைத்து தனி பள்ளி, தனி ஜும்மா என்று நாங்கள் செல்லும்பொழுது ஏதோ நாங்கள்தான் ஒற்றுமையை குலைத்துவிட்டது போலவும், நாங்கள் இல்லை என்றால் ஊர் ஒற்றுமைக்கு பங்கம் வராது என்பதுபோலவும் சித்தரிக்கிறார்கள், ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பெரியபள்ளிக்கும் பனேசா பள்ளிக்கும் காலம் காலமாக இருந்த சொதுப்பிரச்சனையால் தனி ஜும்மா நடத்தினார்கள், இப்பொழுது முபாரக் பள்ளியும் கடை ஒதுக்கீடு பிரச்சனையால் தனி ஜும்மா நடத்தியுள்ளது, இதன் மூலம் நஜாத் காரர்களாள்தான் ஊர் ஒற்றுமை குலைகிறது என்று சொல்பவர்களின் வாதம் பொய் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது, மறுமை வெற்றியை மையமாக வைத்து கொள்கைக்காக பிரிவதை குறைகூறுபவர்கள், சொத்து பத்துகளுக்காக சண்டையிட்டுக்கொள்வது நியாயம்தானா?என்பதை சிந்திதுப்பர்க்கவேண்டும், ஊர் ஒற்றுமைக்காக பள்ளியின் சொத்தை விட்டுகொடுக்க முடியவில்லை, ஊர் ஒற்றுமைக்காக கடைகளை விட்டுக்கொடுக்க முடியவில்லை எற்றால், கொள்கையை விட்டுக்கொடுக்க எங்களால் மட்டும் எப்படி முடியும்?
நாங்கள் சொல்வதுதான் சரி, நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ஒருசாரார் கர்வத்தோடு நடந்தால் அநீதி இழைக்கப்பட்டவர்கள் தட்டிக்கேட்க்க நேரிடும்பொழுது ஒற்றுமை ஒற்றுமை என்று கூப்பாடு போடுவது ஏமாற்று வித்தையாகும், ஒரே ஜும்மா வைத்துவிட்டால் மட்டும் ஒற்றுமை வந்துவிடாது, ஒரே கொள்கை, சமநீதி, சமபங்கு இருந்தால் மட்டுமே ஒற்றுமையை உண்டாக்கமுடியும் என்பதை நாம் உணரவேண்டும். கொள்கை வேறுபாட்டால் பிரிந்து நிற்கவேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டாலும், ஒரே கொள்கையுடைய உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை, மார்க்க விசயங்களை தவிர்த்து மற்றவிசயங்களில் ஊரின் இணக்கத்தையும், ஒற்றுமையையுமே நாங்களும் விரும்புகின்றோம்.
உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்' என்று கூறுவீராக!(அல்-குரான்-9.24)
9.38. நம்பிக்கை கொண்டோரே! உங்க ளுக்கு என்ன நேர்ந்தது? 'அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!' என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
No comments:
Post a Comment