Tuesday, 9 April 2013

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பொறியியல் படிக்க வாய்ப்பு...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பொறியியல் படிக்க வாய்ப்பு...
 
 
அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாட்டில் வேலை செய்யும் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் படிப்புகளில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

வரும் கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.பி, எம்.டெக், எம்.பி.ஏ, எம்.எஸ்சி ஆகிய படிப்புகளுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

 
 
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக வளாகத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் (யூஎஸ் $200)விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை எடுத்து Director, Centre for International Affairs. Anna University. Chennai என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 15ம் தேதி கடைசி நாளாகும். முதுகலை மற்றும் அயல்நாட்டு மாணவர்கள் இளநிலை, முதுகலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.annauniv.edu/cia/advertisement%20%28cnf%29.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.

 
 
நன்றி:- தினமணி

Sunday, 17 February 2013

அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனை சரியா?-P.J.உரை...


அப்சல்குரு விற்கு தூக்கு சரியா ? from jahir on Vimeo.

லால்பேட்டை TNTJ பொதுக்கூட்டம்-புகைப்படங்கள்-2

லால்பேட்டையில் நடைப்பெற்ற தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த சகோதரர் ஜெயக்குமாருக்கு கோவை ரஹ்மதுல்லா குரான் மற்றும் தாவா சம்மந்தமான நூல்களை வழங்கினார் 
 
 
 
  
 
 

லால்பேட்டை பொதுக்கூட்டம்-புகைப்படங்கள்-1


அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக 16.02.2013 அன்று “இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம்” நடைப்பெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும், மாநில பேச்சாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் “தவ்ஹீத்தும்,தவ்ஹீத் ஜமாஅத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், லால்பேட்டை மற்று அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்தும் திரளான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!






Thursday, 14 February 2013

லால்பேட்டை பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு....

இன்ஷால்லாஹ் நமதூரில் வரும் சனிக்கிழமை மலை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் www.onlinepj.com இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் காணத்தவறாதீர்கள்....



Wednesday, 13 February 2013

மதிப்பற்றுப்போன மனித உயிர்கள்! மாற்றப்படவேண்டிய தண்டனைச்சட்டங்கள்!! விடைகான வாருங்கள் லால்பேட்டையை நோக்கி.....

மதிப்பற்றுப்போன மனித உயிர்கள், அரசியல் கொலைகள், தினந்தோறும் அரங்கேறும் பெண்களுக்கெதிரான பாலியல் கொலைகள், தீர்வு என்ன? விடைகான அழைக்கிறது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை,,,,,


Sunday, 10 February 2013

அதிக மதிப்பெண் எடுப்பது ! எப்படி ?



அதிக மதிப்பெண் எடுப்பது ! எப்படி ?

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதுஇன்றைய சமூக சூழல் ஒரு மாணவனின் அறிவாற்றலை அவன் பெறும்மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கிறதுஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒருமாணவனின் ஒட்டு மொத்த வாழ்க்கை சூழலையும் அல்லது குறைந்த பட்சம் பலஆண்டுகளுக்காவது தீர்மானிக்க கூடியதாக உள்ளது.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அந்த மாணவன் தன்கல்விக்காக வருங்காலங்களில் செலவிடப்போகும் பணத்தைஅவன் தந்தையோ,தாயோ படப்போகும் சிரமத்தை  தீர்மானிக்கிறதுஇச்சூழ் நிலையில் மாணவர்கள்கல்வியின் ஆற்றலை உணர வேன்டும்மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தைஉணர்ந்து அதிக மதிப்பெண்களை எடுக்க முயற்சிக்க வேண்டும்

படிப்புக்கும் நமக்கும் தூரம் அதிகம்

பெரும்பாலான மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. அதற்கு காரணம் என்ன? ஒரு விஷயத்தில் ஆர்வம் இல்லாததற்கு காரணம் அதனுடைய விளைவுகள் தெரியாது தான். படித்தால் என்ன நடந்துவிடப் போகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் படிப்பினால் உயர்வு பெற்ற பலரை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. நிச்சயமாக ஒவ்வொருவர் வீட்டிலும் அல்லது வீட்டுக்கு அருகிலும் படிப்பால் தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தி கொண்டவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எந்த ஒன்றையும் விரும்பி செய்தால் அதில் வெற்றி பெற முடிகிறது. பல பேர் சினிமா பாடல்களை முழுவதுமாக மனப்பாடமாக பாடுவதற்காக காரணம் கூட அதை அவர்கள் அதிகம் விரும்புவது தான் . தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் சினிமாவை விரும்பும்  மாணவர்கள் இனி மேல் படிப்பையும் விரும்ப முயற்சிக்க வேண்டும், படிப்பை விரும்பத்தக்கதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து காண்போம்

ஆர்வம் இருந்தால் வலி தெரிவதில்லை

 ஒரு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும் மாணவன் எத்தனை தடவை விழுந்தாலும், காயம் ஏற்பட்டாலும், வலியை பொருட்படுத்தாமல் விடாமல் முயற்சித்து கற்றுக் கொள்வதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான ஆர்வம்.
 நீச்சல் கற்று கொள்ளும் மாணவன் , அதனால் ஏற்படும் உடல் வலியையோ, மூச்சுத்திணறலையோ பெரிது படுத்தாமல் தொடர்ந்து முயற்சித்து நீச்சல் கற்று கொள்வதற்கு காரணம் அதில் உள்ள அதிகப் படியான
ஆர்வம்.  அந்த ஆர்வம் ஏன் படிப்பில் இல்லை. நல்ல விஷயங்கள் எப்போதுமே உடனடியாக மனிதர்களுக்கு பிடிக்காது. அது மனித இயல்பு.

சிலபேருக்கு பாகற்காய் பிடிக்காது, அதை கண்டாலே பத்து அடி ஓடுவார்கள் ஆனால் ஒரு டாக்டர் சொல்லுவார் " உங்க உடம்பு பிரச்சினை தீரனும்ன பாகற்காய் மட்டும் தான் சாப்பிடனும் இல்லைனா உங்களுக்கு நாம காரண்டி இல்ல "  இதன் பிறகு முதலில் வெறுப்போடு பாகற்காயை சாப்பிட தொடங்குவார் அதன் பின் பாகற்காய் ரொம்ப அவருக்கு பிடிச்சு போயிடும்..  அது இல்லாமல் உணவே இறங்காது அது போல் தான் படிப்பும் ஆனால் அது இவ்வளவு கசப்புடையதல்ல .
பாகற்காய் போல் படிப்பு கசப்பதும் தேன் போல் இனிப்பதும் நம் மனதில் தான் உள்ளது..
படிப்பு எப்படி இனிக்கும் ...?

விடாமுயற்சி வெற்றியின் முதல் படி

நம் மாணவர்கள் செய்யும் பெரும் தவறு , ஒரு பாடம் வரவில்லை என்றால் அதை ஒட்டு மொத்தமாக தூக்கி எறிந்து விடுகின்றனர். அந்த புத்தகத்தையே தீண்டுவது கிடையாது.இவ்வாறு இருப்பது சரியா? படிப்பு என்பது முதலில் பிடிக்கா விட்டாலும் போக போக பிடிக்க ஆரம்பிக்கும் . உதாரணதுக்கு கணக்கு பல பேருக்கு பிடிக்காத ஒரு பாடம் இத கண்டு புடிச்சது யாரு என்கின்ற வாசகத்தை பல பேர் உச்சரிப்பதை பார்த்திருப்பீர்கள், இதற்கு காரணம், தனக்கு வராது என்று நம் மனதில் நீங்கள் போட்டுக்கொள்ளும் தவறான  விதை அதுவே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒட்டு மொத்த மனதையும் ஆக்கிரமித்து விடுகிறது அந்த பாடத்தை நம்மிடமிருந்து வெகு தூரத்திற்கு அழைத்து சென்று விடுகிறது

இவரால் முடிந்தது உங்களாலும் முடியும்

எந்த மனிதனும் தோற்க விரும்பமாட்டான்.அதனால் தான் எந்த படிப்பு சிரமமோ அதை வெறுக்கிறான். காரணம்தோற்று விடுவோம் என்ற பயம் அதன் பிறகு மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற வெட்கம். இந்த பயமும், வெட்கமும் தான் உங்களின் முதல் எதிரி , நம்மால் முடியாது என்று நினைத்துவிட்டால் ஒரு குழந்தை எழுந்து கூட நிற்க முயற்சிக்காது, மற்றவர்கள் சிரிப்பார்கள் என்று நினைத்தால் எத்தனை தடவை விழுந்தாலும் நடக்க முயற்சிக்கிறதே அவ்வாறு முயற்சிக்காது , இறைவன் எல்லா குழந்தைகளிடமும் இயற்கையாவே தந்துள்ள விடா முயற்சி எனும் இப்பண்பை நாம் தான் தொலைத்து விட்டோம்.

ஒரு முறை படித்தால் புரியாத பாடம் பல முறை முயற்சித்தால் புரிந்தே தீரும். எழுதிப்பாருங்கள் , நன்றாக படிக்கும் நண்பர்களிடம் கேளுங்கள் , ஆசிரியர்களிடம் உதவி தேடுங்கள். TNTJ மாணவர்  அணியை தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு தெரிந்து 9 ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் பெயில் ஆன மாணவன் ஒருவன்  10 ஆம் வகுப்பில் 93% மதிப்பெண் எடுத்தார். அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தார். காரணம் ஒன்றே ஒன்று தான் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை, விடாமுயற்சி , கடின உழைப்பு.

எப்படி படிப்பது

மனப்பாடம் செய்யும் பழக்கம் மாணவர்களை நல்ல திறமையுள்ள மனிதர்களாக உருவாக்காது. புரிந்து கொண்டு படித்தால் நீண்ட நாள் உங்கள் மனதில் நிற்கும். எனவே முடிந்த வரையில் புரிந்து கொண்டு படிக்க முயற்சியுங்கள்.  நன்கு படிக்கும் மாணவர்களோடு நட்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும். படிப்பவை மனதில் நிற்க உடனடியாக எழுதிப் பாருங்கள் .எழுதும் போது உங்களுடய தவறுகள் புலப்படும்.மறக்காது. கணக்கு எனக்கு வராது என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள். கணக்கை  போன்று எளிதான பாடம் கிடையாது. உண்மையிலேயே அதிக மதிப்பெண் பெற எளிய பாடம் கணக்கு . தொடர்ந்து செய்யும் பயிற்சி தான் அதை எளிதாக்குகிறது. 9 ஆவதில்  தோல்வி அடைந்த ஒருவரைப் பற்றி சொன்னது நினைவிருக்கும். அவர் பெற்ற மொத்த மதிப்பெண் 5 பாடமும் சேர்த்து 75 மதிப்பெண் (15 %). ஆனால் அவர் பொதுத் தேர்வில் கணக்கு பாடத்தில் 99% மதிப்பெண் எடுத்தார். இது கதையல்ல நிஜம். ஒவ்வொரு பாடத்திலும் கடை பிடிக்க வேண்டிய பொதுவான விதிகளை கீழே காண்போம்

கணக்கு  

கணக்கில் உள்ள ஃபார்முலாக்களை எழுதி வைத்து மனப்பாடம் செய்யுங்கள்.அதற்கென்று தனி நோட்டு போடுங்கள். கணக்குகளை எழுதி எழுதி பயிற்சி செய்யுங்கள் முதலில் தவறானாலும் தொடர்ந்து முயற்சியுங்கள்.  இது நம் வாழ்க்கையை தீர்மானிக்க போகும் ஒரு களம் என்பதை மனதில் வைத்து  தொடர்ந்து முயற்சிக்கும் போது பதில் வந்தே தீரும் ஆசிரியர்களின் மற்றும் நன்றாக படிக்கும் மாணவர்களின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குழுவாக அமர்ந்து பயிற்சி செய்து பாருங்கள் ஒருவர் சோர்ந்து போகும்போது மற்றவர் தேற்ற வேண்டும்.இவ்வாறு முயற்சித்தவர்கள் பல பேர் வென்றிருக்கிறார்கள்.

தமிழ் , ஆங்கிலம்

தமிழ் , ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களை இலக்கணப்பிழை இல்லாமல் எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும். அதற்கு என்ன செய்ய வெண்டும்? மனப்பாடம் செய்வது , எழுதிப் பயிற்சிப்பது ஒரு முறை..
இலக்கணத்தை நன்றாக கற்றுக் கொண்டு உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுவது இரண்டாவது முறை.
எந்த முறை உங்களுக்கு வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.

அறிவியல்

அறிவியல் பாடங்களில்  வரும் விதிகள் போன்றவற்றை நம் சொந்த வார்த்தையில் எழுதக் கூடாது. மாறாக புத்தகத்தில் உள்ளது போல் மனனம் செய்து அப்படியே எழுத வேண்டும் மற்ற கேள்விகளை பொருளையும் , பெயரையும் மாற்றாமல் உங்கள் சொந்த வார்த்தைகளில்எழுதவும்.ஒரு கேள்வியை படிக்கும் போதே அதை பகுதி பகுதியாக பிரித்து படிக்கவும் , revision செய்வதற்கு வசதியாக ஒரு நோட்டில் குறிப்புகள் எடுத்து கொள்ளவும் அதாவது ஒரு பக்க பதிலை கால் பக்கத்திற்கும் குறைவாக இருப்பது போல் முக்கிய வார்த்தைகளை வைத்து (hint) குறிப்பு எடுத்து கொள்ளவும். இது பரீட்சைக்கு படிக்கும்  இறுதி நேரத்தில் உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தும்.   படங்களை அழகாக பாகங்கள் குறித்து வரைந்து பழகவும்.

சமூக அறிவியல்

சமுக அறிவியல் பாடங்களில் உள்ள ஆண்டுகளையும் நாடுகள்  மற்றும் முக்கியமானவர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தனி நோட்டுப் போட்டு அவற்றை எழுதிப் பாருங்கள்.
எழுதும் முறை
படிப்பது ஒரு முறை என்றால் அதைப் பரிட்சையில் வெளிப்படுத்துவது மற்றொரு முறை,
பரிட்ச்சையில் எவ்வாறு எழுதினால் அதிக மதிப்பெண்களை பெறலாம் என்பதற்கான குறிப்புகளும் சில நுணுக்கங்களும் கிழே தரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டிலேயே பயிற்சி செய்து பார்ப்பதன் மூலம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற இயலும்.

1.  படித்ததை எல்லாம் வெளிப்படுதுவதற்கல்ல தேர்வு. தேவையானவற்றை தெளிவாக உணர்த்துவதுதான் நல்ல விடைகள்.

2.அதிகமாக எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் எனும் தவறான மனப்பான்மை
மாணவர்களிடம் காணப்படுகிறது, அதிக பக்கங்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுத்தராது

 3.வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள்
முழுவதுவமாக எழுதி முடித்தவுடன் வினாவை மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய
பதிலுக்கும் வினாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கதை
மட்டும் படித்து விட்டு எழுதியதால் இது போன்ற பிரச்சினைகள் உருவாக
வாய்ப்புள்ளது எனவே வினாத்தாளை முழுவதுமாக வாசிக்க வேண்டும்.

4. பத்து நிமிடங்கள் எந்த வினாவிற்கும் பதில் எழுதாமல் நன்கு தெரிந்த வினாக்களை
அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்

5. எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியும் என்றால் அவற்றில் நன்கு தெரிந்த பதிலை
முதலில் எழுதுவது நல்லது. திருத்துபவர் மனதில் முதலில் ஏற்படுத்தும் தாக்கம்
சிறந்த தாக்கமாக அமையும் (the first impression is the best impression) எனவே
நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதுவது நல்லது.

 6. நன்றாக தெரிந்த வினாவிற்கு தேவைக்கு அதிகமாக எழுதி தேர்வின் பாதி நேரத்தை
வீணடித்து விடக் கூடாது ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில்
கொண்டு தகுந்த நேரம் ஒதுக்க வேண்டும். எக:- 3 மனி நேரம் பரீட்சை என்றால் 10
நிமிடம் - கேள்வி தாளை முழுவதுமாக ஒரு பார்வை பார்க்க 5 நிமிடம் - தெரிந்த
விடைகளை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்த அடுத்து ஒவ்வொரு கேள்விக்கும்
கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்கி எழுத வேண்டும்.

7. பொது தேர்வுக்கு முன் பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து மேற்கூறிய முறையை பயிற்சி செய்து கொள்ளவும்.அழகான கையெழுதுக்காக
பயிற்சி செய்யவும், அழகிய முறையில் எவ்வாறு தேர்வு எழுதுவது என்பதையும்
காண்போம்

8. தேர்வில் அழகாக, மற்றும் தெளிவாக எழுதுவதன் மூலமாக திருத்துபவரின் சிரமம்
குறைகிறது, அவர் சிரமம் குறைந்தால் நம் மதிப்பெண் அதிகரிக்கும்.

9. பரிட்சை தாளை திருத்துபவர் எல்லா பலவீனங்களும் கொண்ட மனிதன் என்பதால் அழகாக
எழுதும் குறைந்த பட்சம் தெளிவாக எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்
பெற வாய்ப்புள்ளது. எழுத்தைக் கொண்டே ஒருவருடைய மனப்பான்மையை ஒரு வகையில்
யூகிக்க முடிகிறது என்று கூறுகிறார்கள், அதிக அடித்தல் திருத்தலுடன் எழுதுவது
ஒருவருடைய நிலையற்ற மனப்பான்மையையும் அவர் சரியாக படிக்கவில்லை , பயிற்சி செய்யவில்லை என்பதை  எளிதில் காட்டி விடும்.

10. அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதற்கு பெரும் சாதனை செய்ய
வேண்டியதில்லை, பொது தேர்வு தொடங்க இன்னும் நாட்கள் உள்ள இந்த தருணத்தில்
வெறும் படிக்க மட்டும் செய்யாமல் படித்ததை சிரமம் பர்க்காமல் எழுதி விடுவது
நாம் பரிட்சையில் செய்யும் பல தவறுகளை நமக்கு அடையாளம் காட்டி விடும்.
பயிற்சித் தேர்விலும் பொதுத் தேர்விலும் கீழ்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலமாக
சிறந்த முடிவுகளை பெற முடியும்.

அ) ஒவ்வொரு வார்தைக்கும்,வரிக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டு எழுதவும்.
ஆ) ஒரு பதிலில் உள்ள முக்கியமான கருத்துக்களை அடிகோடிட்டு காட்டவும்.
 இ) அடிக்கோடிடுவதற்க்கு 2B என்ற கருமை அளவுடைய பென்சிலை உபயோகிப்பது நல்லது.
வண்ண எழுதுகோல்கள் (SKETCH PEN/PENCIL) உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது
நல்லது. ஏனெனில் முட்டாள் தனமான வண்ணங்களை அடிக்கோடிட உபயோகிப்பது
திருத்துபவரின் எரிச்சலை கூட்டும் நம் மதிப்பெண்ணை குறைக்கும். எனவெ சற்று
கூடுதல் கருமையான (2B) பென்சில்களை உபயோகிப்பது நல்லது.
ஈ) அறிவியல் பாடங்களில் வரையும் படங்களை அழகாக வரைவதுடன் அனைத்து பாகங்களையும்
கட்டாயம் குறித்து காட்டுங்கள். முடிந்தால் நகல் எடுத்தது போல் வரைவது நல்லது
(இதற்காக அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம்)
 உ) முதல் கேள்வியில் அழகாக எழுதத் தொடங்கி , செல்ல செல்ல கோழிக் கிறுக்கலாக
மாறிவிடக் கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்கி எழுதுவதன்
மூலமாக தேர்வின் கடைசி நிமிடத்தில் நடைபெறும் இது போன்ற தவறுகளை திருத்திக்
கொள்ளலாம். கடைசி நிமிடம் வரை படிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

11. எவ்வாறு கேள்வித் தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்க கூடாதோ அதைப் போலவே
கடைசி வினாடி வரை எழுதக் கூடாது,குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்னதாக எழுதி
முடித்துவிட்டு கீழ்க்கண்டவற்றை சரி பார்க்கவும்.

 > ஒவ்வொரு பதிலுக்குமான கேள்வியின் எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரி
பார்க்கவும் இது மிக மிக முக்கியம்.
> ஒவ்வொரு பதிலிலும் முக்கியமான புள்ளிகள் அடிக்கோடிடப்பட்டுள்ளதா என்பதை
சரிபர்க்கவும்.
> கணிதமாக இருந்தால் விடையின் கடைசியை அல்லது தீர்வை
அடிக்கோடிட்டு உள்ளீர்களா என்பதை சரி பார்க்கவும்.
> சூத்திரங்கள் பெட்டிக்குள் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.

12. மிகவும் முக்கியாமான ஒன்றை கவனத்தில் கொள்ளவும்.எக்காரணம் கொண்டும் 786(!),
நாகூர் ஆண்டவர் துணை (!) பிஸ்மில்லாஹ், முருகன் துனை, போன்ற வாசகங்களை விடைத்
தாளில் எழுத வேன்டாம். இது முதல் பார்வையிலேயே உங்கள் மீது தவறான எண்ணத்தை
ஏற்ப்படுத்தலாம்.திருத்துபவர் மாற்று நம்பிக்கையாளர் ஆகவோ அல்லது இறை நம்பிக்கை
அற்றவராக இருக்கும் பட்சத்தில் இவை எதிர் மறை விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பும்
உள்ளது.எனவே பக்தியை எழுத்தில் காட்டாமல் மனதில் நினைத்து எழுத தொடங்கி விடுவது
நல்லது. குறிப்பு: 786, நாகூர் ஆண்டவர் துணை என்பதெல்லாம் இஸ்லாத்திற்கு
முற்றிலும் எதிரானவை.

13. எல்லாவற்றிக்கும் மேலாக கடின உழைப்பும், அதிகமாக பயிற்சி தேர்வுகளை
எழுதுவதும் உஙகள் மதிப்பெண்களை கூட்ட உதவும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு
துணை புரிய பிரார்த்திக்கிறோம்.
- N.அல் அமீன் - TNTJ மாணவர் அணி

Saturday, 9 February 2013

லால்பேட்டையில் மாபெரும் மார்க்கவிளக்கப் பொதுக்கூட்டம்...

            ஏக  இறைவனின் திருப்பெயரால்.....
கடலூர்  மாவட்டம் லால்பேட்டையில்....

மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

நாள்:- 16-2-2013 சனிக்கிழமை மாலை 6.00 மனி 

கோவை.ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்)
இஸ்லாமிய சட்டமே தீர்வு

தாவூத் கைசர்
தவ்ஹீத் கொள்கையும், தவ்ஹீத் ஜமாத்தும்

இஸ்லாம் சட்டம் சொல்லும் தீர்வை மற்றவர்களுக்கு உணர்த்திட அனைவரையும் அன்போடு அழைக்கிறது.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-லால்பேட்டை
கடலூர்-மாவட்டம்
 

Thursday, 31 January 2013

விஸ்வரூபத்தை எதிருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் சிறுகுழுக்கள் அல்ல-ஜெயலலிதா


விஸ்வரூபம் திரைப்படம் சர்ச்சை சம்மந்தமாக இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களை சந்தித்தார் இது சம்மந்தமாக எதிர்கட்சிகள் செய்தும் விமர்சனங்களை ஜெயலலிதா முற்றிலுமாக மறுத்தார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது என்று தெரிவித்தார், பிரச்சனைக்கு கமலின் பிடிவாதம்தான் காரணம் என்றும் தெரிவித்தார், கமல் சொல்வதுபோல் விஸ்வரூபம் படத்தை எதிர்பவர்கள் சிறு குழுக்கள் அல்ல, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 7.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் அமைப்பு என்றார், இஸ்லாமிய குழுக்களோடு பேசி சுமுக தீர்வை ஏற்படுத்த தமிழக அரசு உதவும் என்றும் தெரிவித்தார்,

Saturday, 26 January 2013

இன்று இந்திய குடியரசு தினம்....

இந்தியாவின் சுதந்திரத்துக்கு இரத்தம் சிந்திய சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். தனது சதவீதத்துக்கு அதிகமாக தியாகம் செய்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். அத்தகைய முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய நிலை இந்தியாவில் என்ன?

Tuesday, 22 January 2013

“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!!



நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)

குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் 10 பேர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்: உள்துறை செயலர் தகவல்....



குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள்  10 பேர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்: உள்துறை செயலர் தகவல்....

நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 பேர், ஆர்.எஸ்.எஸ். இயக்கதுடன் தொடர்புடையவர்கள் என்று இந்திய உள்துறை அமைச்சக செயலர் கூறியுள்ளார்.

இதுகுறித்து உள்துறை செயலர் ஆர்.கே.சிங் டெல்லியில் கூறியதாவது:-

சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், தர்கா ஷெரிப் ஆகிய குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தினோம். இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள 10 பேர் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. சாட்சியங்களின் வாக்குமூலங்களும் எங்களிடம் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்குறிப்பிட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 நபர்களின் பெயர்களையும் உள்துறை செயலர் ஆர்.கே. சிங் வெளியிட்டார்.

Sunday, 20 January 2013

சென்னை மெட்ரோ ரெயில் பணியில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு!




மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013.

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை : அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்!





குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.
தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.
டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.
போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.
பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?
ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?
சிறுமிக்கு தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், மைனர் வயதை 14ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.
சவூதியில் அதுதான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.
டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்க்கிறார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.
இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள், ஜோசப் பாபா பையன்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தை இவர்கள் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப்பார்ப்பதுதான் சரியான பார்வையாகும்.
அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.
அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.
ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் சட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.
குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்யவேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?
லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.
அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?
கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?
இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில்மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?
சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான். நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.
கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்? மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.
கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.
மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள்.
இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வெளியீடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Wednesday, 16 January 2013

நமதூர் அனைத்து முஹல்லா ஜமாத்துகளுக்கும் அழகிய வேண்டுகோள்!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்….)
அன்புக்குரிய பள்ளிவாசல் ஜமா-அத் நிர்வாகிகளுக்கு,
இந்த மடல் தூய இஸ்லாமிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களை சந்திக்கட்டுமாக!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரில் சில பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் என்ற பெயரில் பல பாடல்கள் ஓதப்பட்டு வருகின்றன. ஆனால், இறைவனது திருப்தியைப்பெறும் நோக்கத்தில் ஓதப்படும் மவ்லூதுகளினால் இறைவனது கோபப்பார்வைதான் ஏற்படுகின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
”பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில்) அவனைவிடுத்து வேறுயாரையும் அழைக்காதீர்கள்” (அல்குர்-ஆன் 72:18) என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை புறந்தள்ளும் விதமாகத்தான் நபிகள் நாயகத்தை அழைத்து பாடப்படும் மவ்லூது வரிகள் அமைந்துள்ளன.
நபிகள் நாயகம் அவர்களை இறைவனுடைய நிலைக்கு உயர்த்தும் பாடல்வரிகளும் இதில் ஏராளமாக உள்ளன.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன் 5:72). எனவே இத்தகைய மாபாதக இணைவைக்கும் காரியத்தை விட்டு நாம் விலகவேண்டும்.
மேலும், இத்தகைய இணைவைப்பு காரியங்களை ஏகத்துவ மையமாக திகழ வேண்டிய பள்ளிவாசல்களில் ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள் இத்தகைய இணைகற்பிக்கும் மாபாதக செயல்களை உங்களது பொறுப்பில் பள்ளிவாசல்களில் செய்ய அனுமதியளிப்பீர்களேயானால் அல்லாஹ் இது குறித்து உங்களிடம் விசாரிப்பான். ஏனெனில், நபிகளார் கூறிக்காட்டியுள்ளார்கள்:
”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)
எனவே, இணைவைக்கும் பெரும்பாவத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும் மவ்லூது, மற்றும் இது போன்ற பாவங்களான தர்கா, தட்டு, தகடு, தாயத்து, போன்ற இணைவைப்பு செயல்களையும், மற்றும் நம்மை வழிகெடுக்கும் பித்அத்களையும் (மார்கத்தின் பெயரால் புதிதாக புகுத்தப்படும் அனாச்சாரங்களையும்) உங்களது பொறுப்பின் கீழ் இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் அனுமதிக்காமல் தடைசெய்யும் படி உரிமையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இத்தகைய செயல்களை இனிமேலும் நீங்கள் அனுமதித்தால் உங்களது பொறுப்பின் கீழுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வழிகெடுத்த பாவத்தையும் நீங்கள் சேர்த்து சுமக்க நேரிடும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
(குறிப்பு: இத்துடன் மவ்லூது வரிகள் திருக்குர்-ஆன் வசனங்களோடு எவ்வாரெல்லாம் மோதுகின்றன என்ற பிரசுரத்தையும் இணைத்துள்ளோம். பார்வையிடவும்)..ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்
இப்படிக்கு,
தங்கள் இம்மை மறுமை நலன் நாடும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்-லால்பேட்டை

ATDC-யில்டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...



ஆடைபயிற்சிமற்றும்வடிவமைப்புடிப்ளமோ படிப்புக்கு தகுதியானமாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனமத்தியஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழாகஆயத்தஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்புமையம் செயல்பட்டு வருகிறது.  ATDC -யில்(Apparel Training and Design Centre)வழங்கப்படும் படிப்புகள்இரண்டு வருட அட்வான்ஸ் டிப்ளமோ படிப்பில் பேஷன்டிசைன்அப்பேரல் மெனுபக்சுரிங்.           .

ஒரு வருட டிப்ளமோ படிப்பில் பேஷன் டிசைன் டெக்னாலஜிஅப்பேரல்மெனுபேக்சுரிங் டெக்னாலஜிஅப்பேரல் பேட்டன் மேகிங் அன்ட் கேடு,அப்பேரல்குவாலிட்டி அஸுரன்ஸ் அன்ட் கம்பலைன்ஸ், நிட்வியர் மெனுபேக்சுரிங்டெக்னாலஜி.

ஆறு மாத சான்றிதழ் படிப்பில் புரோடக்ஷன் சூப்பர்விஷன் அன்ட் க்வாலிட்டிகன்ரோல்,அப்பேரல் பேட்டன் மேக்கிங்நிட்வியர்  மெனுபாக்சுரிங் டெக்னாலஜிஅப்பேரல்எக்ஸ்போர்ட்      டெக்னாலஜி ஆகியபடிப்புகள் வழங்கப்படுகின்றன.

இது மட்டும் அல்லாமல் குறுகிய கால படிப்புகளும்   வழங்கப்படுகின்றன.

நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கையேடு மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை பெற ரூ.150 வரைவோலை செலுத்திகல்விநிறுவனத்தில் பெற்று கொள்ளலாம்தபால் மூலம் அனுப்ப ரூ.200செலுத்தவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன்வரைவோலை இணைத்து ஜனவரி25ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்மேலும் விரிவான தகவல்களுக்கு Apparel Training and Design Centre (ATDCகீழ் கண்ட  இணையதளத்தை பார்வை இடவும்
http://www.atdcindia.co.in/

டெக்னீஷியன் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...




செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணியிடங்கள்

செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணிகளுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிடெக்னீஷியன் டிரெய்னி - 85

கல்வித் தகுதிமெக்கானிக்கல்எலெக்ட்ரிக்கல்சிவில்எலெக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது28க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.01.2013

மேலும் விவரங்களுக்கு : http://sail.shine.com

 இந்து்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 250 காலியிடங்கள்

ந்து்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணிக்குவிண்ணப்பிக்கலாம்மெக்கானிக்கல்சிவில்எலெக்ட்ரிக்கல்எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம்பெற்றிருக்க வேண்டும்‘கேட் 2013’ தேர்வு எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
25 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.24,900 - 50,500

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி14.02.2013

விவரங்களுக்குwww.hindustanpetroleum.com

Monday, 14 January 2013

லால்பேட்டை கிளை சார்பாக மருத்துவ நிதியுதவி....

TNTJ கடலூர் லால்பேட்டை கிளை சார்பாக 11.01.2013 அன்று லால்பேட்டை TNTJ கிளையின் குர்பானி தோல் விற்ற நிதியிலிருந்து அப்துல்லாஹ் என்ற ஏழைச் சிறுவனின் வயிற்றுப் புண் அறுவைச் சிகிச்சைக்காக அவரது தந்தையிடம் ரூபாய்.10,000/- வழங்கப்பட்டது.

இந்த சிறுவனின் உடல் சுகமடைய துஆ செய்யுங்கள்.




தனி நபர் தாவா!

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 11.01.2013 அன்று மாலை தனி மனிதர்களை சந்தித்து ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. லால்பேட்டையை சார்ந்த ரஹ்மத் நகரில் சுமார் 10 நபர்களை இவ்வாறு சந்தித்து தாவா செய்யப்பட்டது.

ஷிர்க்கு எதிராக லால்பேட்டையில் தீவிர பிரச்சாரம்!

TNTJ லால்பேட்டை கிளை சார்பாக 09.01.2013 புதன்கிழமை அன்று லால்பேட்டை ரஹ்மானியா வீதியில் 8 வீடுகளில் ஷிர்க்கின் விபரீதங்களை விளக்கி அங்கிருந்த தகடு, படிகாரக்கல் போன்றவை அகற்றப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்! 



TNTJ லால்பேட்டை கிளை சார்பாக 10.01.2013 அன்று லால்பேட்டையைச் சார்ந்த 
ஜாகிர் ஹுஸைன் நகரில் இணைவைப்புக்கு எதிரான பிரச்சாரத்தின் போது படிகாரக் கல், திருஷ்டி மிளகாய் போன்றவை அகற்றப்பட்டன. சுமார் 15 வீடுகளில் அன்று தாவா செய்யப்பட்டது.








Saturday, 12 January 2013

விண்வெளி திருவிழா 2013 (Aerospace festival 2013) ...


விண்கலங்கள் மற்றும் வானூர்தி பற்றிய அறிவை வளர்க்கும் வகையில் வின்வெளி திருவிழா 2013ஐ  (Aerospace festival 2013) தஞ்சாவூர்  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்த உள்ளதுPMU(Periyar PURA (Providing Urban Amenities in Rural Areas)) (கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்என்ற திட்டத்தின் கீழ்இந்நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பட்டுள்ளதுநாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை கிராமப்புறங்களில் உள்ளமாணவர்கள் அறிந்து கொள்ளவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இந்நிகழ்ச்சியில் நம் நாட்டின் முன்னனி நிறுவனங்களின் முதன்மையான கண்டுபிடிப்புகளான BrahMos,ISRODRDONAL, HAL, TNSCST, ADA, ADE and IISCவை இடம் பெற உள்ளனமேலும் தற்போதைய மற்றும்எதிர்கால ஆராய்சிகள் பற்றிய தகவல்களும் உள்ளன.விஞ்ஞானி APJ.அப்துல் கலாம், இஸ்ரோ முதன்மை இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை மேலும் இதுபோன்ற பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.வானூர்தி மற்றும் விண்வெளி (Aeronautical and Aerospace Engineering) பற்றிய அறிவை வளர்ப்பதும்நிகழ்காலமற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனபதே இந்நிகழ்சியின்முக்கிய நோக்கமாகும்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வானூர்தி மற்றும் விண்வெளி பொறியலின்முக்கியதுவம் மற்றும் பயன்பாடுகளை அறிந்து கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.ஜனவரி 21 – 2013முதல்  ஜனவரி23 – 2013மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜனவரி 17– 2013க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு கட்டணம் உண்டு.மேலும் தகவல்களுக்கு கீழ் கண்ட இணையதளத்தை பார்வை இடவும்http://www.pmu.edu/aerofest/.