Monday, 31 December 2012

ரஹ்மானியா வீதியில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை சார்பாக 26.12.2012 அன்று மாலை லால்பேட்டை ரஹ்மானியா வீதியில் ஷிர்க்கிற்கு எதிராக TNTJ தாவா குழு விடு வீடாக சென்று  பிரச்சாரம் செய்து ஷிர்க்கின்அடையாளங்களைஅப்புறப்படுத்தினர் அல்ஹம்துலில்லாஹ்...












லால்பேட்டை கிளை சார்பாக மருத்துவநிதி உதவி...

குடல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைச் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக லால்பேட்டை TNTJ கிளை சார்பாக ரூபாய் 15,000/- மருத்துவ உதவியாக அவரின் தந்தையிடம் வழங்கப்பட்டது. 

டெல்லி மருத்துவ மாணவி கொலைவழக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி பீ.ஜே ஆற்றிய உரை:


Sunday, 30 December 2012

அநீதிக்கு எதிராய் அணிதிரள்வோம்...






விமானப்படை பணியிடங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு(AFCAT)‏




AFCAT (Air force common Admission Test) என்று அழைக்கப்படும் விமானப்படையில் பல்வேறு பதவிகளில்சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு எழுத திருமணமாகாத ஆண்விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விமானப்படையில் Flying Branch, Technical Branch, Ground Duty Branches(தரைவழிப் பிரிவுபோன்ற பிரிவுகளில் ஆண்பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Flying Branch (பறக்கும் பிரிவு)
விமானப்படையில் பறக்கும் பிரிவில்(Flying Branch) சேர விரும்பும் மாணவர்களின் வயது வரம்பு 19 முதல் 23 வரைஇருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Commercial Pilot License பெற்றிருக்கும் பட்சத்தில் வயதில் இரண்டுஆண்டுகள் தளர்வு உண்டுஅதாவது வயது 25 வரை இருக்கலாம்விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளநிலைப்பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்ஆனால்பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூவகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதம்இயற்பியல் பாடங்கள் எடுத்து படித்திருக்க வேண்டும்அல்லது நான்குஆண்டு BE அல்லது B.Tech. படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
Technical Branch
டெக்னிக்கல் பிரிவில் இரண்டு முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்அதாவது Short Service Commission மற்றும் Permanent commission என்ற பிரிவுகளின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

டெக்னிக்கல் பிரிவில் Short Service Commission-னில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Aeronautical Engineer(Electronics) பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்அல்லது Associate Membership of Institution of Engineers தேர்வில் மற்றும் B-ல் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்அல்லது Aeronautical Society of India அல்லதுGraduate Membership Examination of the Institute of Electronics And Telecommunication Engineers தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.

Technical பிரிவில் Aeronautical Engineer (Mechanical) பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்இதே பிரிவில்நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்அல்லது Associate Membership of Institution of Engineers, A மற்றும் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
Permanent commission கீழ் Aeronautical Engineer (Electronics) பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்டபிரிவில் பி.அல்லது பி.டெக்60 சதவீத மதிப்பெண்களில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்இறுதியாண்டுபடிக்கும் மாணவர்களும் இந்தப் பிரிவில் விண்ணப்பிக்கலாம்.

Permanent commission கீழ் Aeronautical Engineer (Mechanical) பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் அதே துறையில்பி.அல்லது பி.டெக்60 சதவீத மதிப்பெண்களில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்இறுதியாண்டு படிக்கும்மாணவர்களும் இந்தப் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

Technical பிரிவில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157.5 செ.மீஉயரம் இருக்க வேண்டும்.உயரத்திற்கேற்ப தகுந்த எடையும்தெளிவான பார்வைத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

Ground Duty Branches(தரைவழிப் பிரிவு)
விமானப்படையின் தரைவழிப் பிரிவின் Administration & Logistics , Accounts , Metrology மற்றும் Education போன்றபல்வேறு பிரிவுகளில் பணியாற்றலாம்.

இந்தப் பிரிவில் விண்ணப்பிக்கும் இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்களாக இருக்கும்பட்சத்தில் வயதுவரம்பு 20 முதல் 23 வரை இருக்கலாம்ஒருங்கிணைந்த முறையில் முதுநிலை பட்டப் படிப்பு அல்லதுஒருங்கிணைந்த எல்.எல்.பி(LLBபடித்து முடித்த மாணவர்களுக்கு வயது வரம்பு 20 முதல் 25 வரை இருக்கலாம்.இளநிலை பட்டப் படிப்பு படித்து பின் இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பு அல்லது எல்.எல்.பிபடித்து முடித்தமாணவர்களி ன் வயது வரம்பு 20 முதல் 26 வரை இருக்கலாம்M.Ed., Ph.D., CA.ICWAபடித்த மாணவர்களுக்கு வயதுவரம்பு 20 முதல் 27 வரை இருக்கலாம்.

இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும்ஆன்லைன் மூலம் விண்ணபிக்க கடைசி நாள்ஜனவரி-8,2012 ஆகும் எனவே மாணவர்கள் இந்த தேதிக்குள் உங்களது விண்ணபங்களை ஆன்லைனில் பதிவுசெய்து கொள்ளவும்.

நுழைவுத் தேர்வு சென்னைபெங்களூருகோயமுத்தூர், தஞ்சாவூர், ைதராபாத்மைசூர்கொச்சி,திருவனந்தபுரம் உள்ளிட்ட 57 நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வு குறித்த கூடுதல் தகவகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியை 
தொடர்பு கொள்ளவும்.
அஜ்மல்மாணவர் அணி -கல்வி சேவை  9944599875, ajmalkh87@hotmail.com, N.அல் அமீன்-அலைபேசி - 9884810993
மின்னஞ்சல் - tntj.students@hotmail.com
details:-http://tntjsw.net

மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசேசெலுத்தும் : முதல்வர் அறிவிப்பு





பிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தைஅரசேசெலுத்தும் : முதல்வர் அறிவிப்பு

பிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்விகட்டணத்தைஅரசே செலுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போது கல்லூரிகளில் அதிகரித்துள்ள கற்பிப்புக் கட்டணம் மற்றும்சிறப்புக்கட்டணம் ஆகியவற்றினால் பிற்படுத்தப்பட்டோர்மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர் மாணவமாணவியர்களின் கல்வி மற்றும்மாணவமாணவியர் சேர்க்கையில்எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்க அரசுமற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில்பயிலும் பிற்படுத்தப்பட்டோர்மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்மாணவமாணவியருக்குதேர்வுக் கட்டணம்முழுமையாக வழங்குவது போல்அவர்கள்செலுத்தும் கற்பிப்புக் கட்டணம் மற்றும்சிறப்புக் கட்டணம் ஆகியவற்றைபள்ளிமேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ்முழுமையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசு துறைகளால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களை உடனடியாகபிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர் மாணவ,மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்புஉதவி திட்டத்தின் கீழ் உயர்த்தி வழங்கவும்முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொறியியல்மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு அரசின் ஒதுக்கீட்டின்கீழ்தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட,சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்விகட்டணம் உயர்த்தும் போது கல்வி உதவிதொகையும்உயர்த்தி வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால்74ஆயிரத்து 181 மாணவர்கள் பயன்பெறுவார்கள்மேலும்,பிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர்நலத்துறைகளின்கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகளிலும்மதுரைதிண்டுக்கல்,தேனி மாவட்டங்களில்இயங்கி வரும் கள்ள சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் 10 மற்றும்12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு இலவச வழிகாட்டி நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்றுபெரம்பலூர்சிவகங்கைதிருவண்ணாமலைவிழுப்புரம்தருமபுரி,திண்டுக்கல்கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய மிகவும் பின் தங்கியமாவட்டங்களில்பயிலும் அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் பயிலும் 10மற்றும் 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா வழிகாட்டி புத்தகங்கள்வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக 2 கோடியே 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கவும் தமிழகமுதலமைச்சர்உத்தரவிட்டுள்ளார்அதனால்இந்த மாவட்டங்களில் பயிலும், 2லட்சத்து 21ஆயிரத்து 400 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 24 December 2012

லால்பேட்டையில் ஷிர்க்கிற்கு எதிராக தொடர் பிரச்சாரம்....

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை சார்பாக நமதூர் மக்கள் அறியாமல் செய்து வரும் ஷிர்க்கான காரியங்களை அவர்களிடம் விளக்கி ஷிர்க்கிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் பணியை தொடர்ச்சியாக செய்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக 23.12.2012 ஞாயிறு காலை வீடு வீடாக சென்று ஷிர்க்கின் விபரீதங்கள் விளக்கப்பட்டு அதன் அடையாளங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன். அல்ஹம்துலில்லாஹ்!