Wednesday, 15 January 2014

கிறித்தவ போதகர்களுடன் நடந்த கலந்துரையாடல்!


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு 15.01.14 - புதன் கிழமையன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிறித்தவ போதகர்களுக்குமிடையில் விவாத அரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது.

காலை 10.15 மணி முதல் மதியம் 2மணி வரை இந்த அரங்கம் நடைபெற்றது.

சத்திய கருத்தக்கள் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டன. அல்லாஹ் இந்த விவாதத்தில் நமக்கு மகத்தான அருள்புரிந்தான்.

TELC கிறித்தவ சபை சார்பாக 30 போதகர்கள் கலந்து கொண்டனர்.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
பக்கீர் முஹம்மது அல்தாஃபி
கலீல் ரசூல்
சையது இப்ராஹீம்
இ.ஃபாரூக்
ஹபீபுல்லாஹ்
கோவை யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த வீடியோவை காணும் ஒவ்வொரு சகோதரரும் இஸ்லாமிய மார்க்கத்தை நமக்கு அளித்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு நன்றிகூறி அவனை போற்றிப்புகழ்வோம். அந்த அளவிற்கு சத்தியத்திற்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை அளித்தான்.

இந்த கலந்துரையாடல் வீடியோ விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.

ப்ரஜெக்டர் பிரச்சாரம் - லால்பேட்டை கடலூர் மாவட்டம்.

15/01/2014 புதன் அன்று லால்பஎட்டையைச் சேர்ந்த கொல்லிமலையில் ஜனவரி-28 சிறை செல்லும் போராட்டம் குறித்த ப்ரஜெக்டர் பிரச்சாரம் செய்யப்பட்டது.

Displaying 20140115_201352.jpg

லால்பேட்டை - கடலூர் மாவட்டம் - ப்ரஜெக்டர் பிரச்சாரம்

15/01/2014 புதன் மாலை ஜாகிர் ஹுசைன் நகரில் ஜனவரி-28 சிறை செல்லும் போராட்டம் தொடர்பான ப்ரஜெக்டர் பிரச்சாரம் செய்யப்பட்டது.
Displaying 20140115_185932.jpg

Displaying 20140115_190841.jpg

Tuesday, 9 April 2013

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பொறியியல் படிக்க வாய்ப்பு...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பொறியியல் படிக்க வாய்ப்பு...
 
 
அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாட்டில் வேலை செய்யும் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் படிப்புகளில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

வரும் கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.பி, எம்.டெக், எம்.பி.ஏ, எம்.எஸ்சி ஆகிய படிப்புகளுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

 
 
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக வளாகத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் (யூஎஸ் $200)விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை எடுத்து Director, Centre for International Affairs. Anna University. Chennai என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 15ம் தேதி கடைசி நாளாகும். முதுகலை மற்றும் அயல்நாட்டு மாணவர்கள் இளநிலை, முதுகலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.annauniv.edu/cia/advertisement%20%28cnf%29.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.

 
 
நன்றி:- தினமணி

Sunday, 17 February 2013

அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனை சரியா?-P.J.உரை...


அப்சல்குரு விற்கு தூக்கு சரியா ? from jahir on Vimeo.

லால்பேட்டை TNTJ பொதுக்கூட்டம்-புகைப்படங்கள்-2

லால்பேட்டையில் நடைப்பெற்ற தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த சகோதரர் ஜெயக்குமாருக்கு கோவை ரஹ்மதுல்லா குரான் மற்றும் தாவா சம்மந்தமான நூல்களை வழங்கினார் 
 
 
 
  
 
 

லால்பேட்டை பொதுக்கூட்டம்-புகைப்படங்கள்-1


அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக 16.02.2013 அன்று “இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம்” நடைப்பெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும், மாநில பேச்சாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் “தவ்ஹீத்தும்,தவ்ஹீத் ஜமாஅத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், லால்பேட்டை மற்று அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்தும் திரளான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!